திரு. ஜெயந்தன் இலகுப்பிள்ளை
மறைவு: 24 ஜூலை 2025
யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பூர்வீகமாகவும், Zambia, Lusaka வை பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயந்தன் இலகுப்பிள்ளை அவர்கள் 24-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், இலகுப்பிள்ளை - பிரேமா தம்பதியினரின் மூத்த மகனும், கிரிதரன் - சுலோச்சனா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உமையாள் அவர்களின் அன்புக் கணவரும்,
எலோரா, ஆண்டாள், அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாளனின் பாசமிகு அண்ணனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 28-07-2025 திங்கட்கிழமை மதியம் 1:00 - 2:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home and Cremation Centre (8911 Woodbine Avenue, Markham) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு,தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் உடலம் North Toronto Crematorium (2 Stalwart Industrial Drive, Gormley, ON) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
