Mrs. Jeyanthy Jeyatharan

(Former Vice Principal - Mahajana College, Tellipalai)

Jeyanthy Jeyatharan

Date of Birth: 29 June 1965 - Deceased: 25 April 2024

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட . திருமதி ஜெயந்தி ஜெயதரன் அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீ. முருகையா- திருமதி. சிவசிவா முருகையா தம்பதியினரின் புதல்வியும், 

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. நாராயண பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

ஜெயதரன் அவர்களின் மனைவியும்,

திருமதி. சுகன்யா அன்ரனிராஜா, சஞ்சீவன் ஆகியோரின் தாயாரும்,

அபியின் பேத்தியாரும்,

ஜெயசீலன், காலஞ்சென்ற ஜெயச்சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் மானிப்பாய் வீதி, உடுவில் (மருதனார் மடச்சந்தியில் இருந்து மானிப்பாய் போகும் போது, உடுவில் மகளிர் கல்லூரிக்கு 200M முன்பாக இடப்பக்கத்தில்) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"2014ம் ஆண்டிலிருந்து மகாஜனக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராகவும், உபஅதிபராகவும் சிறப்பான சேவை ஆற்றிய திருமதி. ஜெயந்தி ஜெயதரன், மகாஜனக் கல்லூரியில் வலைப்பந்தாட்டத்தை மீண்டும் தொடங்கி, மாணவிகளைப் பயிற்றுவிப்பதில் அயராது உழைத்தவர். அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு எமது கல்லூரி சமூகம் சார்பிலும், எமது சங்கத்தின் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். விஜய் தியாகராஜா தலைவர் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், கனடா "
- Vijay Thiagarajah (Canada, 27/04/2024 10:59)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2024 22:32)