Mrs. Jeyarani Paramanathan
Date of Birth: 07 August 1958 - Deceased: 20 March 2026
யாழ் மீசாலை தெற்கு, மீசாலையைப் பிறப்பிடமாகவும், தாமோதரம்பிள்ளை வீதி, சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராணி பரமநாதன் அவர்கள் இன்று 20-03-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கனகம்மா தம்பதியரின் சிரேஷ்ட பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், சரஸ்வதிபிள்ளை தம்பதியரின் அன்பு மருகளும்,
பரமநாதன் (ஓய்வுபெற்ற வங்கியாளர், இலங்கை வங்கி, சாவகச்சேரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கீதா (நோர்வே), நிசாந்தன் (பலநோக்குகூட்டுறவு சங்கம், சாவகச்சேரி), நிரஞ்சன் (கிராம அலுவலர், பிரதேச செயலகம், தென்மராட்சி), விஜிதா (ஆசிரியை, யாழ் /கச்சாய் மத்திய வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயபாலன் (ஒப்பந்தகாரர்), ஜெயக்குமார் (ஓய்வுபெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்), ஜெயதேவன் (ஜேர்மனி), ஜெயமணி (கனடா), ஜெயலக்சுமி (ஜேர்மனி), ஜெயக்காந்தன் (நோர்வே) ஆகியோரின் சகோதரியும்,
றஜீவன், றம்சியா (ப.நோ.கூ.சங்கம் சாவகச்சேரி), சரணியா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தென்மராட்சி), அகிலன் (ஆசிரியர் யாழ்/ மீசாலை வீரசிங்கம் மத்திய வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலக்கியன் (நோர்வே), டிருஷன், யாத்விகா, கேசியன், டிருசியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-03-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தாமோதரம்பிள்ளை வீதி, சங்கத்தானை.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
