திருமதி ஜெயராணி புலேந்திரன்
தோற்றம்: 30 ஜூன் 1959 - மறைவு: 15 பெப்ரவரி 2024
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராணி புலேந்திரன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் - நல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
புலேந்திரன் (துர்க்கா கேற்றரிங்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தங்கேஸ்வரி, புவனேஸ்வரி, கமலேஸ்வரி, தர்மகுலசிங்கம்(ஜேர்மனி), பாமினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரராஜா, சிவப்பிரகாசம் மற்றும் செல்வராஜா, சந்திரலேகா, செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்தனியும்,
சிந்து (கிருத்திகா), கீர்த்திகன், ஜெனார்த் ஆகியோின் பாசமிகு தாயாரும்,
ராஜூ அவர்களின் அன்பு மாமியாரும்,
நிதுஷா, கிறித்தீஸ், நிவீஸ் ஆகியேராின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் பூதவுடல் 24-02-2024 சனிக்கிழமை அன்று அஞ்சலிக்காக மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும்
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
என்ற முகவரியில் வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும், பின்னர் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 2.00 மணியளவில்
Highland Hills Funeral Home and Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada இற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- நீர்வேலி நலன்புரிச் சங்கம் - கனடா
www.tamilthakaval.org
