Mrs. Jeyarani Sinniah
Date of Birth: 27 January 1952 - Deceased: 03 November 2025
யாழ். கொய்யாத்தோட்டதைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராணி சின்னையா அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா (இளைப்பாறிய பிரதம தபால் அதிபர்) - நாகரட்ணாம்பாள் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (இளைப்பாறிய அதிபர்) - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா (ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் - இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
நிலானி (கொழும்பு), நிசாந்தன் (CEO - MR Seal), நிசாந்தின் (தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிஷான் (Sierra Steel Colombo), அபர்ணா (Managing Director - MR Seal), அருள்குமரன் (தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகநாதன் (இலண்டன்), குகதாசன் (அவுஸ்ரேலியா), ஜெயகுமாரன் (பிரான்ஸ்), ஜெகசோதி அகியோரின் அனபுச் சகோதரியும்,
செல்வநாயகி (இலண்டன்), கீத்தா (அவுஸ்திரேலியா), சந்திரகுமாரி (பிரான்ஸ்), ஜெயக்குமார் (ஓய்வுபெற்ற ஆசிரியர் - யாழ். புனித பத்திரியார் கல்லூரி), Drதணிகாசலம் (அவுஸ்திரேலியா), குணமணி (கொழும்பு), காலஞ்சென்ற Dr. இரத்தினகோபால், சுந்தரலிங்கம் (துன்னாலை), கணேசலிங்கம் (ஜேர்மனி), சரோஜினிதேவி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தரஞ்சன்,கெஷ்வின், நிர்துலா, சுவராகினி,சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-11-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல 25, புது வீதி,
கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
