திரு. ஜெயரஞ்சிற் வைத்திலிங்கம்
(முன்னாள் முகாமையாளர் - S.V.M / Cerina Stores)
தோற்றம்: 05 ஆகஸ்ட் 1959 - மறைவு: 20 டிசம்பர் 2025
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல-118, வாசல வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு-13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயரஞ்சிற் வைத்திலிங்கம் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் வைத்திலிங்கம் - லட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
சந்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவாந்தன் (Relationship Manager - NDB Bank), அபர்ணா (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
மயூரன் (கனடா), சஞ்ஜிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜாந்தின் தாத்தாவும்,
ரவிரஞ்சிற், சுசித்தரா, சுகுந்தா, சுமேதா ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4. 00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலரச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-12-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
