Mrs. Jeyawathy Anandamuruga

Jeyawathy Anandamuruga

Date of Birth: 26 April 1943 - Deceased: 14 May 2025

கொழும்பு - பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜெயவதி ஆனந்தமுருகா அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - அம்பிகை தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான அழகரட்ணம் - தர்மவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆனந்தமுருகா (Rtd Officer - HSBC) அவர்களின் அன்பு மனைவியும்,

கஜேந்திரன், கௌதமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரதீபா, நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுசன், தனிக்கா, சயேஷா, தருண் தரண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

புனிதவதி, தாரகேசன், காலஞ்சென்றவர்களான திலகவதி, மகேசன் மற்றும் இன்பவதி, சபேஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-05-2025 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பொரளை A.F.Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2025 04:00)