திரு ஜேக்கப் ஸ்ரனிஸ்லாஸ்
(ஓய்வு பெற்ற தபால் அதிபர்)
மறைவு: 19 ஜனவரி 2018
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் இளவாலையையும் புத்தளத்தையும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜேக்கப் ஸ்ரனிஸ்லாஸ் 19.01.2018 வெள்ளிக்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஜேக்கப் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற மரியம்மாவின் அன்புக் கணவரும் ஜோசபின் இமாக்குளேற்(ஓய்வு பெற்ற பிரதி அதிபர், சென்.மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம், புத்தளம்), சாள்ஸ் ஜெயராசன்(ஜேர்மனி), டனிசியஸ் ஜெயநாதன்(ஆஸ்திரேலியா) காலஞ்சென்ற ஜெயரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும் எஸ்.ஞானசேகரம்(ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் நீர்ப்பாசனத் திணைக்களம், புத்தளம்), திருமதி மரியர் ராஜீஷ, திருமதி பிரியதர்சினி ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்றவர்களான திரேசாப்பிள்ளை, றோசாலியா மற்றும் அருட்சகோதரி லூர்ஸ் மேரி (திருக்குடும்ப கன்னியர் மடம், இளவாலை), திருமதி லூர்து(இந்தியா)ஆகியோரின் சகோதரனும் திருமதி திரேசம்மாவின் மைத்துனரும் ரெறன்ஸ், றெபேக்கா, டெனிஸ், டியான், டானியல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் நாளை (22.01.2018) திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று புத்தளம் தில்லையடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வும்.
தகவல்: குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
