திரு. ஜோன் குயின்ரஸ் திருஞானம்

(ஓய்வு நிலை கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் வடமாகாணம்)

ஜோன் குயின்ரஸ் திருஞானம்

மறைவு: 10 நவம்பர் 2025

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோன் குயின்ரஸ் திருஞானம் அவர்கள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், திருஞானம் - மேரி ஹலன் ஜேசிலின் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,  காலஞ்சென்றவர்களான பீட்டர் தேவராஹ் - ஏரோஜீனி மார்கிரட் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விஜித்தா அவர்களின் பாசமிகு கணவரும்,

தனுசன் (இலங்கை மின்சார சபை யாழ்ப்பாணம்), கீர்த்திகா (யாழ். மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சஜானா (வீதி அபிவிருத்தி திணைக்களம்) அவர்களின் மாமனாரும்,

ஆதித்யன் அவர்களின் பாசமிகு பேரனும்,

கிளின்ரஸ் (பொது வைத்திய பரிசோதகர்), ஜோன்சன் ஹரின்ரஸ் (அச்சக தொழில் அதிபர்), நிக்சன் டைட்டஸ் (புள்ளி விபரவியல் அலுவலகர் - யாழ் மாவட்ட செயலகம்), வீன்ரஸ் (உப அதிபர் - யாழ். இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் மூத்த சகோதரனும்,

ஜைவள்ளி, ஜெஸ்வின் றதினி, திஷ்யந்தினி, மரிய நிதிஷன், டினோ கிரிஷான்த், கீர்த்திக்கா, கீர்த்தனா, லக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ராஜன் (அவுஸ்திரேலியா), ராஜீ, ரகு (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-11-2025 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லதிலிருந்து திருப்பலிக்காக புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி ஆராதனைகளின் பின்னர் சரீரம் புனித கொஞ்சேந்தி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 28, சோமசுந்தரம் அவன்யூ,

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2025 20:48)