திரு. ஜோசப் கருணாரட்ண

ஜோசப் கருணாரட்ண

தோற்றம்: 09 டிசம்பர் 1949 - மறைவு: 01 ஜூன் 2025

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தை, 32வது  லேனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோசப் கருணாரட்ண அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப் (இளையகுட்டி) - மேரி பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற அருள்ஜோதி (ஓய்வுபெற்ற Nuffield பாடசாலை அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற விஜயரதி பரமநாதன் அவர்களின் அன்புச் சகோதரனும்,

நிரோஜினி (Managing Director- Primes Joyce Global (pvt) ltd & Canadian Immigration Consultantcy (pvt) ltd) அவர்களின் அன்புத் தந்தையும்,

சுபக்ஷன் (Director- Primes Joyce Global (pvt) ltd & Canadian Immigration Consultantcy (pvt) ltd) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2025 திங்கட்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை (இல-18, 32வது ஒழுங்கை, வெள்ளவத்தையில்) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணி முதல் யாழ். பரியோக்கப்பு ஆலய (முத்திரைசந்தி) சபை மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-06-2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, சரீரம் தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/06/2025 04:00)