Mr. Joseph Karunaratna
Date of Birth: 09 December 1949 - Deceased: 01 June 2025
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தை, 32வது லேனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோசப் கருணாரட்ண அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப் (இளையகுட்டி) - மேரி பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அருள்ஜோதி (ஓய்வுபெற்ற Nuffield பாடசாலை அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விஜயரதி பரமநாதன் அவர்களின் அன்புச் சகோதரனும்,
நிரோஜினி (Managing Director- Primes Joyce Global (pvt) ltd & Canadian Immigration Consultantcy (pvt) ltd) அவர்களின் அன்புத் தந்தையும்,
சுபக்ஷன் (Director- Primes Joyce Global (pvt) ltd & Canadian Immigration Consultantcy (pvt) ltd) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2025 திங்கட்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை (இல-18, 32வது ஒழுங்கை, வெள்ளவத்தையில்) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணி முதல் யாழ். பரியோக்கப்பு ஆலய (முத்திரைசந்தி) சபை மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-06-2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, சரீரம் தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
