திரு. K. பாலசுப்பிரமணியம்

(ஸ்ரீ லங்கா புத்தகசாலை உரிமையாளர்- பூண்டுலோயா)

K. பாலசுப்பிரமணியம்

மறைவு: 19 மார்ச் 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி கிராமம், பூண்டுலோயாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. கே. பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூண்டுலோயா எஸ்.கருப்பையாப்பிள்ளை - ருக்மணி அம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான அம்பிட்டிய நடேசப்பிள்ளை - மாரியாய் அம்மாளின் மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேக், நிவேதா ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,

பிரதிக்சனின் மாமனாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் (சென்னை), சந்திரன் (மஸ்கெலியா), மகேந்திரன் (திருச்சி), ரஞ்சிதம் (சென்னை), காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி (தெல்தொட்ட), பத்மாவதி (மாத்தளை) மற்றும் கிருஸ்ணவேணி (கொட்டகலை), சகுந்தலா (ஹட்டன்) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாராயணசாமி (சென்னை), பெரியசாமி பிள்ளை (தெல்தோட்ட), துரைசாமிப்பிள்ளை (மாத்தளை), ராஜேந்திரன் (கொட்டகலை) மற்றும் குருமூர்த்தி (ஹட்டன்), சந்திரா, திலகவதி, சகுந்தலா, சண்முகம் (கொழும்பு), அருணாச்சலம் (அம்பிட்டிய), கணேஸ் (கலகா) ஆகியோரின் மைத்துனரும், தியாகராஜா, கௌசல்யா ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-03-2026 சனிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூண்டுலோயா மின் மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/03/2026 00:00)