திரு. நவாலியூர் கந்தையா கணேசமூர்த்தி (JP)
(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்)
தோற்றம்: 12 நவம்பர் 1946 - மறைவு: 15 ஜனவரி 2024
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கல்லுவம் கரவெட்டி, வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கணேசமூர்த்தி அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் மருதடியான் திருவடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பசுபதி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புனிதவதியின் அன்புக் கணவரும்,
லவன் (ஆசிரியர் - குரவில் தமிழ் வித்தியாலயம்), பிரணவன் (பிரித்தானியா), ஜனனி (கொழும்பு), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தீபிகா, வர்ணிகா, சஞ்ஜேன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மங்களமூர்த்தி (கனடா), சூரியமூர்த்தி (கனடா), ஜெயமூர்த்தி (கனடா), சந்திராதேவி - சுரேந்திரன் (நியூயோர்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரக்ஷத்திரா, சர்விக், நிவீக், ஆத்விக், மிஷேய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னார் பூதவுடல் 17-01-2024 புதன்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையும் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்சாலையில் (Mahinda Parlour) வைக்கப்பட்டு 18-01-2024 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் அக்கினியுடன் சங்கமமாகும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
