திரு. K.மகேஸ்வரன்
(கந்தப்பளை - குமார் டிரேடர்ஸ் உரிமையாளர்)
தோற்றம்: 04 ஜனவரி 1972 - மறைவு: 13 ஜூன் 2024
நுவரெலியா கந்தப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. K. மகேஸ்வரன் அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தப்பளை கூத்த பெருமாள் தேவர் (சோக்கு அண்ணன்) - காலஞ்சென்ற இந்ராணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற துரைசாமி - பஞ்சவர்ணம் தம்பதியினரின் மருமகனும்,
நிர்மலா அவர்களின் அன்பு கணவரும்,
கிஷானின் அன்புத் தந்தையும்,
சதீஸ்குமார் (அவுஸ்திரேலியா), பிரதீபன் (இத்தாலி) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற வேலாயுதம் தேவர் - மெய்யாத்தாள், காலஞ்சென்ற மெய்யப்பன் தேவர் - மீனாட்சி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இராகலை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 15-06-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கந்தப்பளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
