திரு. கே. நடராஜ் உடையார்

(உரிமையாளர் - சுப்ரமணியம் ஸ்டோர்ஸ், கந்தபளை)

கே. நடராஜ் உடையார்

தோற்றம்: 26 அக்டோபர் 1958 - மறைவு: 13 மே 2024

நுவரெலியா கந்தப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜ் உடையார் அவர்கள் 13-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ரா. கிருஷ்ணசாமி உடையார்-செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,

யோகலஷ்மி அவர்களின் அன்புக்கணவரும்,

சிந்துஜா, பிரித்திவிராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசிகுமாரின் மாமனாரும்,

ராமசாமி, பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற ராஜேந்திரன், அருள்தாஸ் (இந்தியா), கிருஷ்ணகுமார் (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,

பரமேஸ்வரி, ரேவதி, நித்தியகலா, சங்கீதா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற புஸ்வதி தம்பதிகளின் (கந்தப்பளை) சம்பந்தியும்,

ரித்திஹாஷினி, மிருத்யா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக கந்தபளை இல்லத்தில் வைக்கப்பட்டு, 15-05-2024 புதன்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் நுவரெலியா பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/05/2024 04:00)