Mr. K.S.Andiyappillai

(Founder - Sri Murugan Stores, Sarathas Pawn Brokers, Madulsima)

K.S.Andiyappillai

Date of Birth: 15 January 1928 - Deceased: 20 December 2025

இந்தியா நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டி கிராமம் உயர்திரு. K.S.ஆண்டியாப்பிள்ளை அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று சேலத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காமாட்சியம்மாள் அவர்களின் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சாரதா (சென்னை), சந்திரசேகரன் (சேலம்) மற்றும் நடராஜ் (சென்னை), பாலகணேசன் (பெங்களூர்), கமலா (கோயம்பத்தூர்), அசோக்குமார் (Neyon Agency - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற N.K.S. தங்கவேல்பிள்ளை (சென்னை), சிவானந்தம் (கோயம்பத்தூர்), ஜெகதாம்பாள் (சேலம்), அஜந்தா (சென்னை), தயா (பெங்களூர்), சுபாஷினி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான N.K. செல்லையாப்பிள்ளை (சென்னை), சப்பாணிப்பிள்ளை (சேலம்), நடராஜ்பிள்ளை (கோயம்பத்தூர்), சுப்பையாபிள்ளை (நாமக்கல்), பெரியசாமிப்பிள்ளை (சேலம்) மற்றும் பெரியண்ணன்பிள்ளை (ஶ்ரீ முருகன் ஸ்டோர்ஸ் - மடுல்சீமை) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை முதல் இல-23/3, TVS காலனி, மீனாட்சி நகர், அஸ்தம்பட்டி, சேலம் - 636007 இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-12-2025 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் சேலம் 7, மரவனேரி காக்காயன் மின் மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2025 00:00)