Mr. K. S. Veluppillai

K. S. Veluppillai

Date of Birth: 14 May 1928 - Deceased: 10 April 2023

யாழ் விடத்தல்பளையை பிறப்பிடமாகவும்,  Zambia, South Africa ஆகிய நாடுகளை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவரும், கணக்காளருமான திரு.  K. S. வேலுப்பிள்ளை அவர்கள் 10-04-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று தமது 95வது அகவையில் கனடாவில்  இயற்கை எய்தினார்.

அன்னார் முன்னாள் மகாஜனக் கல்லூரி ஆசிரியை (மகாஜனக் கல்லூரிச் இயக்கத்தின் குருளையர் பிரிவுப் பொறுப்பாளர்) திருமதி. G. Y. வேலுப்பள்ளை (Patron Mahajana College Old Student's Association- Canada) அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,

கனடாவில் வசிக்கும் ஐந்து மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
 
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின்  வாழ்நாளை கொண்டாடும் அஞ்சலி நிகழ்வுகள் 10-04-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று  Toronto வில் குடும்பநிகழ்வாக அன்னாரின் எட்டு பாசமிகு பேரப்பிள்ளைகள் சகிதம் நடை பெற்றது.

மகாஜனக் கல்லூரியின் வெற்றி பெற்ற  ஆங்கில நாடகங்களை நெறிப்படுத்துவதில் திருமதி.  G. Y. வேலுப்பிள்ளையுடன் தோளாக இருந்து உதவி செய்ததுடன், Shakespeare  இன் படைப்புகளை எளிமையான ஆங்கில உரை நடையில் மேற்படி நாடகங்களுக்காக அமைத்துக் கொடுப்பதிலும் முக்கிய பங்கெடுத்தவரும் காலஞ்சென்ற  K. S. வேலுப்பிள்ளை என்பதனை உலகளாவிய மகாஜனங்கள் யாவரும் நன்றியுடன் நினைவு கூருகிறோம்

அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு எமது கல்லூரி சமீகம் சார்பிலும்,எமது சங்கத்தின் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபகங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2023 02:35)