Mrs. Kailasanathan Thavachelvi
Deceased: 31 December 2025
முல்லைத்தீவு - முள்ளியவளை 2ம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கைலாசநாதன் தவச்செல்வி அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - கணேசம்மா (ஓய்வுபெற்ற அதிபர்கள்) தம்பதியினரின் அன்பு புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான காசித்தம்பி - பார்வதிப்பிள்ளை (கற்கிடகு) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கைலாசநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தமிழரசியின் (கலைமகள் வித்தியாலய மாணவி) பாசமிக்க தாயாரும்,
அரவிந்தன் (அதிபர்), சுரேந்திரன் (பிரதேச சபை உத்தியோகத்தர்), நரேந்திரன் (கிராம சேவையாளர்), காலஞ்சென்ற பங்கையற்செல்வி, கலைச்செல்வி (ஜேர்மனி), தமிழ்ச்செல்வி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிற்பகல் 3:00 மணியளவில் நாவற்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
