திருமதி. கைலாயநாதன் சிவகாமசுந்தரி

கைலாயநாதன்  சிவகாமசுந்தரி

மறைவு: 27 நவம்பர் 2024

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கைலாயநாதன்  சிவகாமசுந்தரி அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கைலாயநாதன் அவர்களின் அன்பு மனைவியும், 

நந்தமழவன் (அருள்), கனகமழவன் (திருள்), கிரிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன் (Banker), பரராஜசிங்கம், பொன்னுத்துரை, ஆறுமுகம், பரமேஸ்வரன், தெய்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயந்தினி அருள் (ரோசா வல்வெட்டி), சியாமளா திருள், மாலதி கிரி  ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7:00-10:00 மணி வரையும், 02-12-2024 திங்கட்கிழமை காலை 9:00-10:00 மணி வரையும் Ajax crematorium (384 Finsley Avenue Ajax, Ontario L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நண்பகல் 12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2024 05:00)