திருமதி. கலையரசி தேசிகநாதன்

(பொறியாளர் (P.Eng-Moscow Russia))

கலையரசி தேசிகநாதன்

தோற்றம்: 11 பெப்ரவரி 1968 - மறைவு: 02 அக்டோபர் 2023

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும், ரஷ்யா Moscow, கனடா Bramptonஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கலையரசி தேசிகநாதன் அவர்கள் 02-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவராசா (யாழ். மத்திய கல்லூரி ஆசிரியர், கோண்டாவில் ராமகிருஷ்ணா வித்தியாலயம்- இளைப்பாறிய அதிபர்), செல்வநாயகி(கொக்குவில் ராமகிருஷ்ணா வித்தியாலயம், யாழ். மத்திய கல்லூரி இளைப்பாறியஆசிரியை) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

தேசிகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அருணாசலம், சீதேவிப்பிள்ளை (திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

சரண்யா, சாருஜன் ஆகியோரின் ஆசைத் தாயாரும்,

எழிலரசி (இலங்கை), அன்பரசி (இலங்கை) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

ஸ்ரீஸ்தத்தாத்திரேயநேசன், பிரதீபன், பாலச்சந்திரன், காலஞ்சென்ற இராசு, யமுனாவதி, தயாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 ஜீவரூபி, விஜயராசா, உமாசுதன் ஆகியோரின் அன்புச்சகலியும்,

யுவேதா, திவ்யநேசன், மானசி, நிரஞ்சன், ஜனார்த்தனன், பிரியதர்சினி, சனிஸ்டன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

கஜன், ரித்தீசன், திவாகரன் ஆகியோரின் அன்புமாமியும்,

கேசாலி அவர்களின் அன்புப் பாட்டியும்,

சிவபாக்கியம், பரமேஸ்வரி, தேவாமிர்தம், ஜெயரா ணி, செல்வரட்ணம், சபாரட்ணம், அழகரட்ணம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

இரத்தின பூபதி, சுகிர்தரட்ணம், ஜெயரட்ணம், சண்முகரட்ணம் ஆகியோரின் ஆசைப் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Monday, 09 Oct 2023        9:30 AM – 12:00 Noon
Chapel Ridge Funeral Home &Cremation Centre
8911 Woodbine Ave,Markham,ON L3R 5G1,

கிரியை:
Monday, 09 Oct 2023        12:00 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home &Cremation Centre
8911 Woodbine Ave, Markham,ON L3R 5G1,

தகனம்:
Monday, 09 Oct 2023          2:00 PM - 2:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario,L0H 1G0, Canada


 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2023 04:00)