திருமதி. கலைநாதன் பிரேமகுமாரி(பிரேமா ஆசிரியை)

(ஓய்வு நிலை விஞ்ஞான ஆசிரியை - புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ் இந்து மகளிர் கல்லூரி)

கலைநாதன் பிரேமகுமாரி(பிரேமா ஆசிரியை)

தோற்றம்: 17 அக்டோபர் 1953 - மறைவு: 24 அக்டோபர் 2024

யாழ். புங்குடுதீவு 1ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலைநாதன் பிரேமகுமாரி அவர்கள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் (அதிபர்)-தர்மலெட்சுமி (ஆசிரியை) தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா (நயினாதீவு வர்த்தகர்)-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும், 

கலைநாதன் (ஓய்வுபெற்ற அதிபர்- புங்குடுதீவு ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம், அவர்களின் அன்புத் துணைவியாரும்,

ரூபதரணி (ஆசிரியை- சைவ மங்கையர் வித்தியாலயம்), பிரணவரூபன் (பொறியிலாளர்-இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

போல் பிரியம்பிள்ளை (Digital Marketer), வேணுஜா (ஆசிரியை-இலண்டன்) ஆகியோரின் ஆருயிர் மாமியாரும்,

பார்கவியின் அன்பு அப்பம்மாவும்,

வத்சலா (கனடா), வனஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திருலிங்கநாதன், லோகநாதன், சாரதாதேவி (பிரான்ஸ்), கெங்காதேவி (பிரான்ஸ்), செல்வநாதன், ஜெகநாதன் (பிரான்ஸ்), சிவபாலன் (கனடா), ரவீந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக 26-10-2024 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2024 04:00)