திருமதி. கலைச்செல்வி பாலசுரேஸ்
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
தோற்றம்: 05 பெப்ரவரி 1971 - மறைவு: 17 மே 2026
மாகோவை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கலைச்செல்வி பாலசுரேஸ் அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் - அஞ்சானதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அரியநாயகம் - கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பாலசுரேஸ் (தம்பா-நில அளவைத் திணைக்களம்) அன்பு மனைவியும்,
ஐதீஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
திருச்செல்வம் (தொழில்துறை திணைக்களம்), சிவச்செல்வன் (சவுதி), சரவணச்செல்வன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அனிற்றா, பிரியதர்ஷினி, சுதர்ஷினி ஆகியோரின் மைத்துனியும்,
சபிஸ்னா, யதுமிகா, ஸ்ரவன், துவாரகன், ஸ்ரேனிக், அஸ்வன் ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 4.30 மணியளவில் திருவுடல் திருக்கோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல.74/20, றோயல் கார்டன்,
கண்டி வீதி, திருக்கோணமலை.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
