திருமதி. கலைவாணி சொர்ணகுமார்

கலைவாணி சொர்ணகுமார்

தோற்றம்: 02 மே 1978 - மறைவு: 11 ஆகஸ்ட் 2024

மலேசியா Petaling Jays ஐ பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலைவாணி சொர்ணகுமார் அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜரத்தினம்-ஞானேந்திரராணி தம்பதியினரின் அன்பு மகளும்,

குமாரதேவன் (கனடா)- சொர்ணகாந்திலக்ஷ்மி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகளும், 

சொர்ணகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனகன் (கனடா), ருஷாந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தினி (ஆஸ்திரேலியா), கோமதி (மலேஷியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கேஷினி (அவுஸ்திரேலியா),  குகனேஷ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,

சாஷ்நிதா (மலேஷியா) அவர்களின் பெரியம்மாவும்,

புனிதவாணி (பஹ்ரைன்), புனிதகுமார் (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

வராகினி (இலங்கை), ஹரிணி (பஹ்ரைன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்  17-08-2024 சனிக்கிழமை அன்று மாலை 5:00 -9:00 வரையும், 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00-9:00 வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1) பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து முற்பகல் 10:30 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.

 இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2024 04:00)