Mrs. Kalaiyarasi (Thivisa) Jenanthanan
Date of Birth: 08 July 1983 - Deceased: 24 December 2025
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலையரசி ஜெனந்தனன் அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - சாரதாதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவபாதம் - வள்ளியம்மை (பிரான்ஸ்) தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
ஜெனந்தனன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெருஷா, ஜயவர்ஷன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
கலைவாணி, கலைவர்மன், கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனகன் (கொழும்பு), தனஞ்சயன், ரமணிதரன் (பிரான்ஸ்), செந்தில்ரூபன், வினோதரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மீரா, சரண்யா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
கவிஷா, கனிகா, கஜானா, கவினஜன், ஏகன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
முருகையா - புஸ்பராணி தம்பதியினரின் மருமகளும்,
மகாலிங்கம் (சுவிஸ்), பாலசிங்கம் (சுவிஸ்), சுந்தரலிங்கம் (தாவடி) ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
ஈஞ்சடி வைரவர் கோவிலடி,
சுதுமலை வடக்கு, மானிப்பாய்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
