திருமதி. கலாஜினி அச்சுதபாதசுந்தரம்(ராதா)

கலாஜினி அச்சுதபாதசுந்தரம்(ராதா)

தோற்றம்: 15 டிசம்பர் 1955 - மறைவு: 03 மே 2024

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொள்ளுப்பிட்டி- கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலாஜினி அச்சுதபாதசுந்தரம் (ராதா)  அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கனகரட்ணம் - சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செல்லையா - திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
திரு. அச்சுதபாதசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
சுதர்சன் (ஐக்கிய இராச்சியம்), சுஜீவன் (கனடா), சுதாஜீவ் (இலங்கை), சுபராஜீ (அவுஸ்ரேலியா), சுஜானிகா (இலங்கை)  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ஜபாமார்டீனா (ஐக்கிய இராச்சியம்), விஜிதா (கனடா), கயாஜினி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சாரா (ஐக்கிய இராச்சியம்), ஜெய்தேவ் (ஐக்கிய இராச்சியம்), சனா (கனடா), சிதானா (கனடா), சிதான் (அவுஸ்ரேலியா), ரிதிஸ் (அவுஸ்ரேலியா), பைரவன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
 
காலஞ்சென்ற கனகாம்பிகை, தேவத்துராணி, ஜீவாஜினி (கனடா), சிவகுமாரன் (கனடா), இராஜலோஜினி (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
பாலசுப்பிரமணியம் (கனடா), விவேகானந்தன், பரமநாதன் (கனடா), உதயகுமார் (ஐக்கிய இராச்சியம்), காஞ்சனா (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் புகழுடல் அவரது இல்லத்தில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் 08-05-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று  தகனக்கிரியைகளுக்காக  பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
முகவரி:
 
இல-34 முகாந்திரம் வீதி,
கொள்ளுப்பிட்டி,
கொழும்பு- 03 
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2024 02:15)