Mrs. Kalajyothi Kokulathas

(முன்னாள் Drancy தமிழ்ச்சோலைச் சங்கத் தலைவர், ஆசிரியர்)

Kalajyothi Kokulathas

Date of Birth: 13 July 1968 - Deceased: 28 June 2025

யாழ். கட்டுவன் தெற்கு முனியப்பர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - Drancy யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - மல்லிகாதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,

கோகுலதாஸ் (றெஜி) அவர்களின் அன்பு மனைவியும், 

அனோஜா, வித்யா, சூர்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

கலாமதி, பகீரதன், கலாநிதி, காலஞ்சென்ற கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

ஜெயவர்த்தனா, தர்சி, அசோக்குமார், காலஞ்சென்ற றஜீபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 95 Rue Marcel Sambat-93430 Villetaneuse எனும் முகவரியில் 01-07-2025 செவ்வாய்கிழமையும், 02-07-2025 புதன்கிழமையும் பிற்பகல் 15:00 - 16:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-07-2025 வியாழக்கிழமை காலை 09:00 மணி முதல் 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 13:30 - 14:30 மணி வரை திருவுடல் சம்பவி (Champgny) மயானத்தில் (560 Av.Maurice Thorez 94500 Champigny-sur-Marne) அமைந்துள்ள மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர், தமிழர் விளையாட்டுக் கழகம் 93

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2025 23:32)