திரு. கலாபூசணம் செ. விஸ்வலிங்கம் (ஸ்தபதி ஆச்சாரியார்)

கலாபூசணம் செ. விஸ்வலிங்கம் (ஸ்தபதி ஆச்சாரியார்)

தோற்றம்: 07 மார்ச் 1937 - மறைவு: 20 பெப்ரவரி 2025

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா விஸ்வலிங்கம் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - சின்னக்குட்டி தம்பதியினரின் மகனும்,

கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

புஸ்மலர் அவர்களின் அன்புக்கணவரும்,

ரமணிதரன், வசந்தி, ஜெகதீஸ்வரன், விஜயந்தி, பகீரதன், பாலராஜன், பிரபாகரன், தமயந்தி, சுபாஷினி, சியாமினி, ரோகிணிதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தி, விஜயரட்ணம், ஜெயகலா, தம்பிராசா, சுஜீத்தா, கலாரஞ்சனி, சுஜாதா, மனோகரன், பிரபு, தயாநந்தன், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், இராசதுரை, நாகம்மா, தெய்வானைப்பிள்ளை, இரத்தினம், அன்னபூரணம், ஆறுமுகதாசன் மற்றும் சின்னத்தம்பி (சோமு), சிவசுப்பிரமணியம் (குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இராணிமலர், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சாரம், இராசலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

ரஜீபன், சஞ்ஜீவன் - ஜரீனா, சுஜீவன், நிருபன் - சாருஹா, பிரதீபன், வினோபன், ஜெனிதா - கருணாகரன், ஜெனிசாந்தன் - ராகில்யா, ஜெனோதா - ராகவன், ஜெனார்த்தனன் - சோபிகா, ஜெயகீர்த்தன், ஜெயதீபன், டனுஷா, ஆகாஷ், சுமேஷ், சந்தோஷ், ரக்‌ஷனா, சபீனா, கஜீனா, ஆதிஷ், ஜெப்ரி, ஷாம், தனீஷ், சாணவி, ஜிஷ்னுதா, ஹஷ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரட்ஷன், ஹஷ்வினி, ஜெமினா, ஜாமினி, அதிசயன், அதிசயா, சஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நீர்வேலி வடக்கு குறுக்கு வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி சியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2025 05:00)