திரு. கலாபூஷணம் சரவணை குமாரசாமி (நாகலிங்கம் மனேச்சர்)

(ஓய்வுநிலை கிளை முகாமையாளர் - சுன்னாகம் பல.நோ.கூ.சங்கம்)

கலாபூஷணம் சரவணை குமாரசாமி (நாகலிங்கம் மனேச்சர்)

மறைவு: 05 அக்டோபர் 2025

யாழ். ஏழாலையை பிறப்பிடமாகவும், ஊரெழுவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கலாபூஷணம் சரவணை குமாரசாமி அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தையா - யோகமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கமலினி, லீனதயாளன் (கிராம உத்தியோகத்தர் - உடுவில் பிரதேச செயலகம்), தமிழினி (முன்னாள் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் - இலண்டன் உயிரியல் மருத்துவ விஞ்ஞானி M.L.T (formar) யாழ் போதனா வைத்தியசாலை, களுபோவல வைத்தியசாலை,கொழும்பு), தயாளினி (முன்னாள் விரிவுரையாளர் - பேராதனைப் பல்கலைக்கழகம் மனித உரிமை ஆணைக்குழு நிர்வாக கற்கை ஒருங்கிணைப்பாளர், கொழும்பு சட்டபீடம், தற்போதைய இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்), தயாளரூபினி (பல்கலைக்கழக மாணவி மருத்துவ பீடம்), தயாளநீதனி (பல்கலைக்கழக மாணவி, பொறியியல் தகவல் தொடர்பாடல் பீடம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சேந்தனா அவர்களின் அன்பு மாமனாரும்,

கேஷகி, மித்ரசகி, ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாதன் (சமாதான நீதவான், அதிபர்), சொக்கலிங்கம் (புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்), பத்மநாதன் (உத்தியோகத்தர் - மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகையா (ஓய்வு பெற்ற சமூக சேவை உத்தியோகத்தர், நெடுந்தீவு - உடுவில் பிரதேச செயலகம்), யோகரத்தினம், செல்வராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-10-2025 புதன்கிழமை அன்று 12:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2025 04:00)