திருமதி. கலாவதி ஜெயசிங்கம்

கலாவதி ஜெயசிங்கம்

தோற்றம்: 04 ஜூன் 1952 - மறைவு: 16 ஆகஸ்ட் 2026

யாழ். பெரியமாவடி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கலாவதி ஜெயசிங்கம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - அமிர்தாம்பிகை தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் - சிவக்கொழுந்து தம்பதியினரின் மருமகளும்,

ஜெயசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிவேதன் அவர்களின் அன்புத் தாயாரும்,

பிரசாந்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,

மீனாக்‌ஷி, ஹரிணி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்ற கலாநிதி, குலதேவி, குலதேவன், சிவநேசன், சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயகௌரி, ஜெயமலர், ஜெயராணி, ஜெயஈஸ்வரி, ஜெயக்குமார், ஜெயராஜன், ஜெயபாலன், ஞானரஞ்சிதம், கருணாகரன், ஒல்கா மற்றும் ஜெயரூபினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணியளவில் நல்லூரிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 651/9, நாவலர் வீதி,

நல்லூர், யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/08/2026 00:00)