திரு காளிமுத்து சிவன் (J.P)
(Ravindras Industries ஸ்தாபகர், கொழும்பு புளூமெண்டல் ஶ்ரீ மகா காளியம்மன் தேவஸ்தான ஆதீன கர்த்தா, அறங்காவலர் சபை தலைவர்)
தோற்றம்: 17 ஏப்ரல் 1928 - மறைவு: 01 மார்ச் 2024
கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காளிமுத்து சிவன் அவர்கள் 01-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற காளிமுத்து-முனியம்மா, அம்மனி அம்மா தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற பம்பயன் தம்பதியினரின் மருமகனும்,
மீனாம்பாள் அவர்களின் அன்புக்கணவரும்,
புஷ்பராணி (தேவி), ரவிச்சந்திரன், பனிமலர், சுதந்திரமணாளன், ரமணதிலகம், சிவனேஷ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கதிர்நாதன், யோகமலர், ரவீந்திரன், சுமதி, திருச்செல்வம் ஆகியோரின் மாமனாரும்,
லவன் - வினோதினி, ராகுலன் - அனா, சுவேதா - எரிசன், லோஷன் - ஜனனி, கிரிஷாந்த், சாரங்கி, ஶ்ரீ துர்க்கா, லதீஷன், ஶ்ரீ சைலினி ஆகியோரின் அன்புத்தாத்தாவும்,
கிரியாஷா, லோஹித், அக்ஷன், தன்வி ஆகியோரின் அன்புப்பூட்டாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடாத்தப்பட்டு, தகனக்கிரியைகளுக்காக மாதம்பிட்டி மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
