திருமதி. கல்வி நாயகி சண்முகதாஸ் கண்டியர்
தோற்றம்: 30 ஆகஸ்ட் 1936 - மறைவு: 10 மார்ச் 2026
கொழும்ப - 14 கிராண்ட்பாஸைப் பிறப்பிடமாகவும், தெமோதர Sothuern Division, வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. கல்வி நாயகி சண்முகதாஸ் கண்டியர் அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகதாஸ் கண்டியர் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரகுமார், காலஞ்சென்ற சிவகுமார், சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சாந்தி, பவானி ஆகியேராின் மாமியாரும்,
அம்ரிதாவின் பாட்டியும்,
விஸ்வலிங்கம், கௌரி, கதிரேசன், ரங்கநாயகி, அங்காள ஈஸ்வரி, சண்முகநாதன், ரூபகிருஷ்ணன், ரெங்கநாதன், பத்மினி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-03-2026 வியாழக்கிழமை அன்று இல-125/7, ஹெந்தளை, வத்தளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டிய இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
