திருமதி. கல்யாணி ஜெகநாதன்
தோற்றம்: 15 மே 1939 - மறைவு: 12 ஜூலை 2024
கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவையும், கொழும்பு-15 யும் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கல்யாணி ஜெகநாதன் அவர்கள் 12-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெகநாதன் அவர்களின் மனைவியும்
விஜயகாந்தன், ஜெயகாந்தன், ரஜினிகாந்தன், ஶ்ரீ காந்தன் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
அம்பிகா, விஜயஶ்ரீ, சசிகலா, ரமணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரேஸ்குமார், அகாஷ்குமார், குலக்ஷியா, அக்ஷனா, அர்ஷினி, பிரகாஷ்குமார், பிரவீன்குமார், தனுஷ்குமார், ஹரிணி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 13-07-2024 சனிக்கிழமை அன்று இறுதி அஞ்சலிக்காக, Royal Gardens (838/10, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு -15) இல் வைக்கப்பட்டு, 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
