Mrs. Kalyani Premathas

Kalyani Premathas

Date of Birth: 02 November 1971 - Deceased: 17 October 2024

யாழ். நவாலி வடக்கை பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கல்யாணி பிறேமதாஸ் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசாமி-கெளரியம்மாள் தம்பதியினரின் இளைய மகளும்,

கனகரத்தினம்-அன்னலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பிறேமதாஸ் (உரிமையாளர்-Mithushiga Enterprise, No-117, 5th Cross Std, Colombo-11) அவர்களின் அன்பு மனைவியும்,

கம்சரூபிணி, யனுஜா, மிதுசிகா ஆகியோரின் தாயாரும்,

பேபி சரோஜா (நவாலி), வரதராஜா (கோண்டாவில்), யோகராசா (பிரான்ஸ்), யோகராணி (திருகோணமலை), தனராசா (கனடா), ஜெயராசா (பிரான்ஸ்), விமலராணி (ஜேர்மனி), கோமதி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சசிகலா (சுவிஸ்), ஜெயகலா (வவுனியா), ஜெகதாஸ் (கனடா), பிறேமலதா (கோண்டாவில்), சசிதாஸ் (அமெரிக்கா), குகதாஸ் (பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 18-10-2024 முதல் 20-10-2024 வரை அன்னாரின் இல்லத்தில் (இல-30A, பெரேரா ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு-06) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2024 04:00)