Mrs. Kamaladevi

Kamaladevi

Date of Birth: 10 October 1951 - Deceased: 27 August 2025

யாழ். காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. கமலாதேவி அவர்கள் 27-8-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேதரடைப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - லட்சுமி தம்பதியினரின் மருமகளும்,

காசிஸ்வர சிவலிங்க சண்முக சங்கரன் (முன்னாள் விரிவுரையாளர் -  கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

யசோதா, பிரபாலினி, பேரின்வதனா, தயாளினி, அரிகரகுமார், தாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமாரன், தனாபலன், குமாரசுந்தரம், சேந்தன், ரேவதி, சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சன், தனுயா, அஷ்னி, கவின், இனியன், அஸ்வின், தர்மிகா, மேனகா, தனோச், திசான், சிபிக்சன் ஆகியோரின் பேத்தியும்,

மகேஸ்வரி, கணேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன், பொன்னம்பலம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பத்துமாவதி, செல்வராணி, நீதிராசா மற்றும் கெங்காதேவி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/08/2025 04:00)