திருமதி. கமலாம்பிகை கந்தையா
தோற்றம்: 17 ஜூன் 1937 - மறைவு: 28 டிசம்பர் 2025
யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Vaughan Ontario யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை கந்தையா அவர்கள் 28-12-2025 கனடா Vaughan Ontario இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர் (முன்னாள் பதிவாளர்) - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,
நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாரிமுத்து - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாசனி, கமலானந்தன், பிறேமாசினி, கமலாசனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவலோகநாதன், சகுந்தலா, சந்திரகுமார், பேரின்பநாயகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, காமாட்சிபிள்ளை, கற்பகம், நவரெத்தினம், ராஜலட்சுமி மற்றும் சின்னம்மா, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சர்வேந் – அமிர்த்தா, சுரேந், ஆர்த்திகா, அபர்ணா – குமரன், அபினேஸ், கீர்த்தனா – சுயன், பகீரன், மிதுலன், அபிரன், பெளர்ணா ஆகியோரின் அன்புமிக்க பேத்தியும்,
ஆத்மிகா, ஆதவி, ஆரண்யா, ராவணன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-01-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணிவரையும், 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
