திருமதி. கமலாதேவி கிருஷ்ணபிள்ளை

கமலாதேவி கிருஷ்ணபிள்ளை

தோற்றம்: 26 ஏப்ரல் 1951 - மறைவு: 03 ஜூன் 2025

யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் மகளும்,

 காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - வள்ளியம்மை தம்பதியினரின் மருமகளும்,

கிருஷ்ணபிள்ளை (ஓய்வுபெற்ற நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜிதா, ஜெயகாந்தன், காலஞ்சென்ற ஜெயரூபன், வினோதா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

கிரிதரன், கௌஷியா, ஜெயா, டினேஷ் ஆகியோரின் மாமியாரும்,

சகானா, அபிநயா, அபிஷா, பிரதோஷன், விகான், கவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விமலாதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-06-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3:00 - 7:00 மணி வரையும், 06-06-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 - 4:00 மணி வரையும் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் BOC லேன், நெல்லியடிச்சந்தி, கரவெட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் 07-06-2025 சனிக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் சோனப்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/06/2025 04:00)