திருமதி. கமலாதேவி மகேஸ்வரன்
தோற்றம்: 01 மார்ச் 1945 - மறைவு: 10 ஜனவரி 2025
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி மகேஸ்வரன் அவர்கள் 10-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை - திரவியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் - குணரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குலநாதன், குணநாதன், குலதேவி, நாகேஸ்வரி, பாக்கியலஷ்மி, சுந்தரநாதன் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், யசோதா மற்றும், சரசா, தர்மசீலன் ஆகியோரின் மைத்துனியும்,
விருபாக்ஷன், ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயவாணி, ஜனனி, ஆகியோரது மாமியாரும்,
தர்சி, பிரஷா, நீரா, கிரியா, தனன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
