Mrs. Kamaladevi Parangsothi

Kamaladevi Parangsothi

Date of Birth: 30 December 1950 - Deceased: 31 March 2026

யாழ். காரைநகர், தங்கோடை, சூரன்வாசத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வெள்ளவத்தை, ஹம்டன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி பரஞ்சோதி அவர்கள் 31-03-2026, செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிறாப்பர் முருகேசம்பிள்ளை - மீனாட்சிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற பொன்னம்பலம் - பரமேஸ்வரி (பரணி இல்லம்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பரஞ்சோதி (All Island JP, SANKAR IMPEX கொழும்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

உமாசங்கர் (பொறியியலாளர் கனடா), நாகநந்தினி (ACCA,MBA) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவிதா (கணக்காய்வாளர் - கனடா), கமலரூபன் (சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கல்கியின் பாசமிகு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற குணரத்னம், சந்திரமதி, ஞானாம்பாள், சுந்தராம்பாள், ராஜராஜேஸ்வரி, தேவநாயகி, காலஞ்சென்ற கணேசலிங்கம். இராஜகுலசூரியர் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

பத்துமாவதி, பரமராசா, நாகம்மா. சுவர்ணம், இராஜலிங்கம், சிவபாலன், செல்வராஜா, ஈஸ்வரி, தயாபரதேவி, புஷ்பகாந்தி மற்றும் காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், பாலசுப்பிரமணியம், செல்வராசா, லோகேஸ்வரி, இரத்தினசிங்கம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பாலதுரை - ஜெயந்திராணி (கனடா), E.S.P. நாகரத்தினம் (கஜமுகன் ஹார்ட்வெயர் - யாழ்ப்பாணம்) - தங்கமலர் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 04-04-2026 சனிக்கிழமை அன்று யாழ் பிரதான வீதி, White House மலர்ச்சாலையில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் White House மலர்ச்சாலையில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் காரைநகர், சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 83/1 - 1/1, ஹம்டன் வீதி,

வெள்ளவத்தை, கொழும்பு - 06.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2026 00:00)