திருமதி. கமலாதேவி செல்வராஜா
தோற்றம்: 12 மே 1939 - மறைவு: 21 டிசம்பர் 2025
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி செல்வராஜா அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
திரு.திருமதி பொன்னம்பலம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வக்கமலன் (கனடா), கமலராஜ் (கனடா), கமலச்செல்வா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீவாமதேவன், சத்தியதேவி, கிருஷ்ணதேவி, காலஞ்சென்ற மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாமா, தயாளினி, ஆரணியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹரிஷ், கிஷன், மோகேஷ், டிவானி, அஞ்சலா, யுகேன், யுகேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:30 - 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home, Markham இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-12-2025 புதன்கிழமை காலை 6:00 - 7:45 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 8:15 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium, Gormley இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
