Mrs. Kamaladevi Subramaniyam

Kamaladevi Subramaniyam

Date of Birth: 05 June 1936 - Deceased: 08 August 2025

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இல-16, Schofiled Place, கொழும்பு -03 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சுப்பிரமணியம் அவர்கள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கச்சியம்மா - நடராஜா (காட்டார்) தம்பதியினரின் மூத்த மகளும், 

காலஞ்சென்ற வைத்திலிங்கம் கந்தர் சுப்பிரமணியம் (பிரதம கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும், 

அழகேசன் (கனடா), ஆதித்தன் (Computer System Limited), முகுந்தன் (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

Dr. கயல்விழி (கனடா), Dr. தமிழ்செல்வி (National Eye Hospital of Sri Lanka), பவானி (இந்து சமய அலுவல்கள் திணைக்களம்) ஆகியோரின் மாமியாரும்,

கவின்கோ (கனடா), சிட்டன்யா (கனடா), சாயலன் (கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன்), வியாபினி (கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்) ஆகியோரின் அப்பம்மாவும்,

மௌலிகாவின் (கனடா) பாட்டியும்,

சச்சிதானந்தம், சரோஜினிதேவி, காலஞ்சென்ற சுலோச்சனாதேவி, விவேகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் உடலம் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/08/2025 04:00)