Mrs. Kamaladevi Thambinathan (Kamala Teacher)

(ஓய்வுபெற்ற ஆசிரியை, நடராஜா இராமலிங்க வித்தியாலயம் ஆவரங்கால்)

Kamaladevi Thambinathan (Kamala Teacher)

Date of Birth: 06 October 1943 - Deceased: 01 May 2026

யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி தம்பிநாதன் (கமலா ரீச்சர்) - ஓய்வு நிலை ஆசிரியை ANRV அவர்கள் 01/05/26 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. கணபதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற திரு. திருமதி. வைத்திலிங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற  தம்பிநாதனின்  அன்பு மனைவியும்,
 
சுதா (கனடா), ஜெகதர்மினி (இலங்கை), ராஜராஜன் (ராஜா -ஜேர்மனி), சற்குணராஜன் (குணம் -லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
கொளரீசன், இந்துவாசன், துசி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சங்கவி, ஹரிஸ்னா, வருணி, தருண், அகரன், ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நவரத்தினம்,பரஞ்சோதி, தனபாலசிங்கம், மற்றும் 
சிதம்பரநாதன், நவரத்தினராஜா, சரோஜினிதேவி, டேசன், நவரத்தினராணி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 04-05-2026ம் திகதி திங்கட்கிழமை காலை 9:00 மணயளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று  பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆவரங்கால் கரதடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றோம். 

 ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா

 

 

 


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2026 15:21)