Mrs. Kamaladevy Sundarasigamani

Kamaladevy Sundarasigamani

Date of Birth: 01 September 1947 - Deceased: 27 March 2025

யாழ். வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி வீதியை பிறப்பிடமாகவும், கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சுந்தரசிகாமணி அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமகள் - உலகநாயகி தம்பதியினரின் புதல்வியும், வேலுப்பிள்ளை - பர்வதாவர்த்தினி தம்பதியினரின் மருமகளும்,

சுந்தரசிகாமணி அவர்களின் அன்பு மனைவியும்,

பிரியதர்சினி (இலண்டன்), மயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பராபரன், சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதிரா, ஆதித்யன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-03-2025 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டு, 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2025 04:00)