திருமதி. கமலம் கனகரட்ணம்
தோற்றம்: 21 பெப்ரவரி 1956 - மறைவு: 01 ஆகஸ்ட் 2025
கண்டி - கம்பளையைப் பிறப்பிடமாகவும், புசல்லாவ வவுகப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலம் கனகரட்ணம் அவர்கள் 01-08-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாசாமி தேவர் - சிலம்பாயி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற ஐயாசாமி தேவர் - பழனியம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
கனகரட்ணம் தேவர் அவர்களின் அன்பு மனைவியும்,
முரளி, ஹிமால் முகுந்தன், சுபாஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயாளினி, புவனா, யோகராஜ் ஆகியோரின் மாமியாரும்,
லேக்ஷா, லிபுக்ஷன் ஆகியோரின் அப்பம்மாவும்,
பிரணவசங்கராவின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-08-2025 சனிக்கிழமை முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-08-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவிவ் உடலம் புசல்லாவை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
