Mrs. Kamalambigai Nagarasa
Date of Birth: 05 March 1934 - Deceased: 17 August 2025
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், Markham - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை நாகராசா அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, நல்லையா, தற்பரன், மாணிக்கம், ஏகம்மா ஆகியோரின் அருமை சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சோமாவதி, இராசலிங்கம், குணமணி, சின்னத்துரை, யோகம்மா, கந்தசாமி, அருணாசலம், உலகநாயகி ஆகியோரின் மைத்துனியும்,
பெறாமகன் பாஸ்கரனின் (பாபு) அன்புத் தாயாரும்,
கருணகலாவின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-08-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 21-08-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் உடலம் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
