திருமதி. கமலாம்பிகை சிவானந்தன்

கமலாம்பிகை சிவானந்தன்

தோற்றம்: 05 டிசம்பர் 1940 - மறைவு: 28 ஜூலை 2025

யாழ். மூளாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை சிவானந்தன் அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - ஆச்சிமுத்து தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், 

காலஞ்சென்ற சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

கர்ணன், சுபதாயினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

பாலமுருகன், நிருத்திகா, ஆகியோரின் மாமியாரும்,

சாதனா, சிவாத்மிகா, ஸ்தாணுராம் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

ஞானாம்பிகை, காலஞ்சென்ற முத்துகுமாரசாமி, சண்முகராசா, தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்ற கௌரிதேவி, சிவகுமார் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-07-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-07-2025 புதன்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் உடலம் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/07/2025 04:00)