Mrs. Kamalarani Rajendram

Kamalarani Rajendram

Date of Birth: 10 August 1944 - Deceased: 27 September 2026

யாழ். வட்டுக்கோட்டை, அராலியை பிறப்பிடமாகவும், இல- 68, கல்லூரி வீதி,  திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலராணி இராஜேந்திரம் அவர்கள் 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - ரத்தினாபரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - தங்கச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜேந்திரம் (பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சல்பமாலா (இங்கிலாந்து), மதன்ராஜ் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

பருதிராஜன் (இங்கிலாந்து), அகிலா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியும்,

சஞ்ஜீவன் (இங்கிலாந்து), சரண்யா (இங்கிலாந்து), அனன்யா (ஐக்கிய அமெரிக்கா), கயல் (இங்கிலாந்து), விதுஷன் (இங்கிலாந்து) ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

கமலாதேவி (ஜேர்மனி), அகிலேஷ்வரநாதன், லக்ஷ்மிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற நவரட்ணம் (ஜேர்மனி), நவராசா, காலஞ்சென்ற பாலா ஆகியோரின் மைத்துனியும்,

சுதாரிணி (ஜேர்மனி), சுரேஷ் (கனடா), சுபாஷினி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,

சோபனா (கனடா) அவர்களின் அன்பு பெரியம்மாவும்,

சிவானந்தனின் சிறிய மாமியும்,

பார்த்திபன் (இங்கிலாந்து), ஜெயச்சந்திரன் (இங்கிலாந்து) ஆகியோரின் வளர்ப்புத் தாயும்,

இந்திரராசாவின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் திருக்கோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 76 217 2912

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2026 00:00)