திருமதி. கமலதாஸ் ரஞ்சினி
தோற்றம்: 29 ஜனவரி 1948 - மறைவு: 07 ஆகஸ்ட் 2026
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இல- 421, திருஞானசம்பந்தர் வீதி, திருக்கோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலதாஸ் ரஞ்சினி அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களாகிய குமாரசுவாமி - செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், சீவரெட்ணம் - நாகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட மருமகளும்,
காலஞ்சென்ற கமலதாஸ் (ஓய்வு பெற்ற பதவி நிலை உத்தியோகத்தர் - வலயக்கல்வி அலுவலகம், திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனார்த்தனன் (டோக்கியோ சிமென்ட், திருகோணமலை), மயூரன் (கணக்காய்வாளர் - கணக்காய்வுத் திணைக்களம் திருகோணமலை), சர்மிளி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
முகுந்தன், சத்தியப்பிரியா, துஷியந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இரவீந்திரன், சுரேந்திரன், பத்மினி, ராகினி (ராஜி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அபிஸ்ணா, அவ்னிதா, தினுக்ஷன், சமிக்கா, அபிர்நாஸ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இல- 17, புனித அந்தோனியார் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
