திருமதி. கமலாதேவி பரநிரூபசிங்கம்
(முன்னாள் ஆசிரியை - யாழ். இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை)
தோற்றம்: 05 டிசம்பர் 1938 - மறைவு: 19 செப்டம்பர் 2025
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி பரநிரூபசிங்கம் அவர்கள் 19-09-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பரிபூரணம் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரநிரூபசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவநாதன், சத்தியநாதன் மற்றும் கோமதி, சந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அகிலன், சுகந்தன், பகிரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தி, வாசுகி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. கோசலன், புவிஷன், நிலோஷா, கிஷோர் ஆகியோரின் அப்பம்மாவும்,
காலஞ்சென்ற ஹரிணி, ஐஸ்வர்யா, ஆர்த்தியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற பத்மலோஜினி, தையல்நாயகி, காராளபிள்ளை, அரியரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-09-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 11:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
