திருமதி. கமலவேணி முருகேசு

கமலவேணி  முருகேசு

மறைவு: 02 நவம்பர் 2025

யாழ். அல்வாய் வடக்கினைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் ஆனந்த காணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலவேணி முருகேசு அவர்கள்  02-11-2025 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு  (முன்னாள் அதிபர் - யாழ். புத்தூர் விஷ்ணு வித்தியாலயம், யாழ். அல்வாய் ஸ்ரீவங்கா வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

திருமதி. சு. இந்திராதேவி (பிரித்தானியா), கந்தவரோதயன் (சுவிஸ்), இராஜவரோதயன் (ஆரம்பகல்வி பிரிவு பொறுப்பாசிரியர் - யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயம்),  இந்திரோதயன் (பொறியியலாளர் - பிரித்தானியா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

காலஞ்சென்ற தங்கத்துரை, திருமதி. மு. இந்திராதேவி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/11/2025 16:42)