திருமதி. கமலாவதி இராமநாதன்

(இலங்கை ஆங்கில ஆசிரியையாகவும், மொன்றியல் அருள் திரு முருகன் கலைநெறிக் கல்விக் கழக முன்னாள் அதிபர்)

கமலாவதி இராமநாதன்

தோற்றம்: 19 அக்டோபர் 1936 - மறைவு: 05 ஏப்ரல் 2023

யாழ் மாதகல் தமிழீழத்தைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்து வந்த இலங்கை ஆங்கில ஆசிரியையாகவும், மொன்றியல் அருள் திரு முருகன் கலைநெறிக் கல்விக் கழக  முன்னாள் அதிபராகவும் கடமையாற்றிய வந்த   திருமதி கமலாவதி இராமநாதன்  அவர்கள் கடந்த  05-04-2023ம் திகதி  புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்செனறவர்களான தம்பிப்பிள்ளை பராசக்தி ஆகியோரின் பாசமிகு மகளும்,

பரகதியடைந்த சின்னத்தம்பி இராமநாதன் (கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் (எழுதுவினைஞர்), முருகையா (வரைவாளர், கட்டிடத் திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு தங்கையும்,

சாந்தகுமாரி, நந்தகுமாரி, இரத்தினகுமார் (மாதகல் கண்ணன்- உலகத் தமிழர் இயக்க ஸ்தாபகர், ஈழமுரசு நிர்வாகி), கமலராணி, திருமால், உமாராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
அரவிந்தன், சிவராசா, சறுகுணலீலா, தர்மராசா, பாரதி, தர்மா ஆகியோரின் அன்பு மாமியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 15-04-2023ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக Complexe Funeraire Aeteina et Crenatorium ,55 Rue Gince Saint- Laurent QC H4N 1J7 Canada இல் வைக்கப்பட்டு மறுநாள் 16-04-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நண்பகல் 12.00 மணிக்கு  இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2023 09:26)